கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

234

karuna_18

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணாநிதி கடந்த சில வாரங்களாக தட்டம்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவில் இருந்து காய்ச்சல் அதிகமாக இருப்பதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் பொன்முடி, ஸ்டாலின் மனைவி துர்கா, ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது உள்ளதாகவும் மேலும் அவருக்கு நீர்சத்து மற்றும் ஊட்டசத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் கருணாநிதி இருப்பார் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

SHARE