கருணா இப்படி செய்தாரா….? தமிழர்களுக்கு தேரர் வெளியிட்ட தகவல்

171

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஷாஸ்பத்தி கொட்டபொல அமரகித்தி தேரர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்த கருணாவின் உறவினரின் மகளது இறுதி கிரியைகள் விகாரை ஒன்றிலேயே இடம்பெற்றதாக தேரர் குறிப்பிட்டார்.

நாவற்குழி சமந்திசுமன விகாரை தொடர்பில் சாவகச்சேரி நீதிபதியின் உத்தரவு தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அமரகித்தி தேரர் கருத்து வெளியிட்டார்.

நாவற்குழி பகுதியில் விகாரை அமைப்பதற்கான தடையை நீதிபதி நீக்கியுள்ளமை நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாவற்குழியில் நிர்மாணிக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் பணிகளை நிறுத்துமாறு நாவற்குழி பிரதேச செயலாளரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து குறித்த விகாரைக்கான நிர்மாணப் பணிகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் விகாரை அமைப்பதற்கான தடையை நீக்கியுள்ளமை தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்திரசேகரனுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

இதேவேளை நல்லிணம் தொடர்பில் ஒரு சம்பவத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன். நாட்டின் கிழக்கு மாகாண பிக்குகள் உட்பட மக்களுக்கு உதவியாக இருந்த கருணாவின் உறவினரின் மகள் அண்மையில் தங்கொட்டுவ பிரதேசத்தில் குழி ஒன்றில் விழுந்து உயிரிழந்து விட்டார்.

பின்னர் அந்த மகளின் இறுதி நடவடிக்கைகள் விகாரையில் பிக்குக்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. நான் அந்த விகாரைக்கு சென்ற போது இந்த சம்பவத்தை நேரில் கண்டேன்.

பிரிவினைவாத கருத்துக்களை வெளியிடும் தமிழ் அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE