கருணா பிள்ளையானுக்கு வெள்ளை அடிக்க வரவில்லை துரோகிகள் யார் ?

138

 

 

வடக்கில் டக்லஸ் தேர்தலில் நிற்கலாம் வெற்றி பெறலாம் மாகாண சபையில் எதிர்க்கட்சியாக இருக்கலாம் அதுவெல்லாம் பிரச்சனை இல்லை டக்கரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தலாம் மகிந்தவின் எடுபிடி அங்கஜனுக்கு வாக்குப்போடலாம் வடக்கில் பிரதேச சபைகளை அவர்கள் ஆட்சிக்கு விட்டுக்குடுக்கலாம். இதையெல்லாம் ஈழத்தமிழர் அரசியல் ஏற்றுக்கொள்ளும் ஆனால் கிழக்கில் கருணா, பிள்ளையான் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது மக்கள் யாரும் அவர்கள் கட்சிக்கு வாக்களிக்க கூடாது கருணா, பிள்ளையான் துரோகிகள் அவைக்கு வாக்குப்போடுறவங்கள் எல்லாம் துரோகிகள் என்று வடக்கு ஈழத்தேசியவாதிகள் கூச்சல் போடுவினம்.

இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறன் டக்லஸ், அங்கஜன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் இவையெல்லாம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகத்தை விடவா அதிக துரோகத்தை கருணாவும் பிள்ளையானும் செய்துவிட்டனர்? கருணா பிள்ளையானால் கொலை செய்யப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்? எங்கே எங்கே படுகொலை செய்யப்பட்டார்கள்?  போராட்டம் தொடங்கிய காலம் தொடக்கம் காட்டிக்குடுப்பை மாத்திரமே தம் தொழிலாக கொண்டிருந்த ரெலோ, புளட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், எல்லாம் இன்று தமிழ் தேசியவாதிகள் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் உயிரைக்கொடுத்து உணர்வோடு போராடி இடையில் பிரிந்து போன கருணா பிள்ளையான் அணி மாத்திரம் துரோகிகளா? 6000 ம் போராளிகளோடு கிழக்கில் நிலைகொண்டிருந்த கருணா புலிகளை எதிர்த்து போராடி இருந்தால் எத்தனை ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் எத்தனை ஆயிரம் உயிர்கள் பறிபோயிருக்கும்? ஏன் அதைச்செய்யவில்லை கருணா? கருணா காட்டிக்கொடுத்து எத்தனை படுகொலைகள் இடம்பெற்றது வன்னியில்?  ஒட்டுமொத்த துரோகிகளுக்கும் வடக்கில் நீங்கள் ஆதரவு குடுப்பீர்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் அவர்களை பாராளுமன்றம் அனுப்புவீர்கள் பதவியில் அமர்த்துவீர்கள் அதுவெல்லாம் தமிழ்த்தேசியம் கிழக்கிற்காய் போராடி கிழக்கிற்காய் பிரிந்து சென்ற கருணா பிள்ளையான் கிழக்கில் அரசியலில் ஈடுபட்டால் ஐயோ துரோகிக்கு ஆதரவு குடுக்கிறார்கள் கிழக்கு மாகாணத்தார் அவர்கள் துரோகிகள் என்று ஒப்பாறி வைத்து கிழக்கிற்கு ஒழுங்கான அரசியல் தலைமை கிடைக்கவிடாமல் செய்வீர்கள் இது என்ன டிசைன் அரசியல்? நான் கருணா பிள்ளையானுக்கு வெள்ளை அடிக்க வரவில்லை அவர்கள் எத்தவறும் செய்யவில்லையென்று கூறவரவில்லை மண்டையன் குழுவென்ற சுரேஸ்பிரேமச்சந்திரனின் குழு செய்த அநியாயத்தில் அட்டூழியத்தில் கால் பங்கு வேண்டாம் நூற்றில் பத்து வீதமாகினும் கருணா பிள்ளையான் அணியினர் செய்திருக்கின்றனரா?

கருணா பிள்ளையான் துரோகியென்று கைகாட்டி விட்டு ஒட்டுமொத்த துரோகிகளையும் கூட்டுச்சேர்த்து வடக்கில் ஆட்சி அமைப்பீர்கள் அபிவிருத்தி செய்வீர்கள் டக்லஸ் சின் கதவுதட்டி அரசாங்க வேலை பெருவீர்கள் அங்கஜனுக்கு மாலை போடுவீர்கள் சுரேஸ்பிரேமச்சந்திரனோடு கரம் கோர்த்து எழுக தமிழ் கோசம் போடுவீர்கள் இதுவெல்லாம் உங்களுக்கு தமிழ்தேசியம் கிழக்கில் பிள்ளையான் கருணா அரசியலுக்கு வந்தால் தமிழ்தேசிய விரோதம் என்னங்கடா நியாயம்?

கிழக்கு தமிழர்களே வடக்கு உங்களை ஒரு போதும் வாழவைக்காது வாழவும் விடாது உங்களின் அரசியலை உங்கள் இடத்தவனை வைத்து மேற்கொள்ளுங்கள் எப்போதும் எதற்கும் அடிபணியாத அரசியல் தலைமையை தேர்ந்தெடுங்கள் கடந்தகாலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் பயணியுங்கள் கிழக்கை தக்கவைக்க பேயோடு என்ன பிசாசோடும் கூட்டணி வையுங்கள் இல்லாது போனால் தடயமின்றி அழிந்துபோவீர்கள் வடக்கு ஒருபோதும் உங்களை ஏரெடுத்தும் பார்க்காது. தன் அபிவிருத்தி தன் நலன் தன் பிரதேசம் தன் அரசியல் என்றுதான் அவர்களின் அரசியல் இருக்கும் இந்தியாவின் அத்தனை உதவிகளையும் வடக்கு தனக்கு மாத்திரமே கேட்டு பெற்றுக்கொள்கிறது சர்வதேச உதவிகளையும் வடக்குக்கு மாத்திரமே கோருகின்றனர்.

இந்திய துணைத்தூதர் எப்போதாவது கிழக்கிற்கு வந்திருக்கிறாரா? கிழக்கின் சார்பாய் யாரேனும் வெளிநாடுகளுக்கு போயிருக்கிறார்களா?இரட்டைநகர் ஒப்பந்தம் மூன்று நகர் ஒப்பந்தமென்று ஓடிப்போய் வெளிநாடுகளில் ஒப்பந்தமிட்டனரே கிழக்கிற்கு ஓர் ஒற்றை நகர் ஒப்பந்தமேனும் ஏற்படுத்தினரா? இந்தியாவின் அம்புலன்சும் இந்தியன் வீட்டுத்திட்டமும் சர்வதேச வாழ்வாதார உதவிகளும் வடக்கிற்கு வேண்டுமென்றுதான் கேட்கிறது தமிழர் அரசியல்தலைமை அது கிழக்கு என்று ஓர் தேசம் இருப்பதை மறந்துவிட்டுத்தான் செயற்படுகிறது.

தொன்றுதொட்டு சிங்கள இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாகி வரும் மாகாணம் கிழக்கு வடக்கில் புத்தர் சிலைவந்தால் கொதிப்பார்கள் கிழக்கில் கோவிலை இடித்துவிட்டு விகாரை, பள்ளிவாசல் கட்டினாலும் பார்த்தும் பாராமல் இருப்பார்கள் இதுதான் வடக்கின் தலைமை. தயவுசெய்து இதை புரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கென்று தனித்துவமான அரசியலை கட்டியெழுப்புங்கள் அவன் துரோகி இவன் துரோகியென்று எவனோ சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொண்டு உங்கள் அரசியலில் பிரிந்து நிற்காதீர்கள். உங்கள் மண், உங்கள் கலாச்சாரம், உங்கள் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்த ஒன்றிணைந்து செயற்படுங்கள் எவனும் எவனுக்கும் துரோகிப்பட்டம் வழங்க முடியாது இங்கு எல்லோரும் ஏதோவோர் சந்தர்ப்பத்தில் சிங்களவனுக்கு சோரம் போனவர்களே எவரும் சுத்த சூசைப்பிள்ளைகள் இல்லை. இதுதான் யதார்த்தம் இதை உணர்ந்து செயற்படுங்கள்

SHARE