தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஆசனம் ஒன்றை வழங்க ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்பு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிள்ளையான் தோல்வியைத் தழுவினால், தேசியப் பட்டியல் ஊடாக அவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்க இணங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிடவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்னதாக தீர்மானித்திருந்தது என கட்சியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டு, அதன் ஊடாக போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் தோற்றாலும் வெற்றியீட்டினாலும் பிள்ளையானுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனுவோ அல்லது தேசியப் பட்டியல் ஆசனமோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட விகையில் கருணாவை வெளியேற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் இம்முறை பிள்ளையானை உள்ளீர்த்துள்ளது அடுத்த தேர்தலில் இவரும் வெளியில் என சில அரசியல் பிரபலங்கள் கூறுகின்றன காரணம் கருணாவை ஈடு செய்ய பிள்ளையான்