கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ரோபோ விந்து 

307
கருத்தரிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கும் தம்பதியர்களுக்கு சிறந்த தீர்வாக ரோபோ விந்தணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஜேர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.இயற்கையான முறையில் விந்தணுக்கள் நீந்துவதன் ஊடாகவே கரு முட்டையை சென்றடையும். இதன் பிறகே கருத்தரித்தல் இடம்பெறும்.

எனினும் வீரியம் குறைவான விந்தணுக்கள் நீந்திச் சென்று கரு முட்டையை அடைவதில் சிக்கல்களை எதிர்நோக்குவதாலேயே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றது.

இப் பிரச்சினைக்கு தீர்வாகவே ஸ்பேர்ம்பொட்ஸ் (Spermbots) எனப்படும் ரோபோ விந்தணுக்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இவை 50 மைக்ரோன் நீளம் உடையதாகவும், 5 தொடக்கம் 8 மைக்ரோன் விட்டம் உடையதாகவும் காணப்படுகின்றது. அதாவது ஒரு மைக்ரோன் என்பது ஒரு மில்லிமீற்றரின் ஆயிரத்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE