விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கருப்பன். இப்படம் விஜய் சேதுபதியை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது.
இவரை கிராமத்து ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளது, கருப்பன் பி மற்றும் சி செண்டர் ஆடியன்ஸிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இப்படம் 3 நாட்களில் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இன்றும் விடுமுறை என்பதால் கண்டிப்பாக இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.