
ஹோம்மேட் தேன் ஐ பேக்
வெள்ளரிக்காய் துண்டு – 3
உருளைக்கிழங்கு துண்டுகள் – 3
தேன் – 1 டீஸ்பூன்
கற்றாலை ஜெல் – 1 டீஸ்பூன்
வெள்ளரிக்காய், உருளைக்கிழங்களையும் தனி தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
இதில் தேனும் கற்றாலை ஜெல்லும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஹோம்மேட் தேன் ஐ பேக் ரெடி. இதைக் கண்களை சுற்றி தடவுவதற்கு முன், பன்னீரால் சுத்தமாக துடைத்த பின் இந்த கீரிமை போடவும். மறுநாள் காலை கழுவி விடலாம். ஒரு வாரத்திலே கருவளையம் மறைய ஆரம்பிப்பதை பார்க்க முடியும்.
ஹோம்மேட் கிரீன் டீ ஐ பேக்
homemade green tea eye cream
பாதாம் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கற்றாலை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
கிரீன் டீ – 1 டீஸ்பூன்
இவற்றை ஒரு பவுலில் போட்டு, நன்கு கலந்து சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் இரவில் உங்கள் கண்களை சுற்றி தடவிய பின், மோதிர விரலால் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸாக சுற்றி மசாஜ் செய்யவும். 10 நாட்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.