கரைத்துரைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளுக்கான தேர்தல் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த மாதம் 28ம் திகதி (28.02.2015) இந்தத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 8 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்ட போது இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மெனிக்பாம் முகாமில் இருக்கும் அகதிகள் இருவர் நீதிமன்றில் தொடுத்த வழக்கினாலேயே இரு பிரதேச சபைகளிலும் தேர்தல் இடம்பெறவில்லை.
இரு பிரதேச சபைகளிலும் மக்கள் மீளக் குடியமராத நிலையில் – அனைத்து மக்களும் வாக்களிக்க முடியாது எனவே இந்த தேர்தலை இரு பிரதேச சபைகளிலும் நடத்தக் கூடாது என அவர்கள் கோரியிருந்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம் இரு சபைகளிலும் தேர்தலை நடத்தத் தடை விதித்தது.