கரை ஒதுங்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா

88

 

கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது.

புத்தளம் – மதுரங்குளி, தொடுவா பகுதியில் இன்று நண்பகல் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் குறித்த புள்ளிச்சுறா சிக்குண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.

கரையொதுங்கிய சுறா
இதன்போது குறித்த புள்ளிச் சுறா மீனை கடற்றொழிலாளர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன் மீண்டும் கடலில் விடுவித்ததாக கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறு கரையொதுங்கிய சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE