கர்ஜனை படத்தில் மாறுபட்ட கோணத்தில் திரிஷா

514
கர்ஜனை படத்தின் புதிய அப்டேட்கர்ஜனை படத்தில் திரிஷா

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
SHARE