கர்ஜிக்கும் ஹரி கேன்! இரட்டை கோல் மூலம் பாயர்ன் அபார வெற்றி

136

 

கலாடாசரே (Galatasaray) அணிக்கு எதிரான போட்டியில் பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஹரி கேன்
UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாயர்ன் முனிச் – கலாடாசரே அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை.

ஆனால், இரண்டாம் பாதியின் இறுதி நிமிடங்களில் பாயர்ன் அணியின் நட்சத்திர வீரர் ஹரி கேன் (Harry Kane) மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்த கேன், 86வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார்.

பாயர்ன் முனிச் வெற்றி
இதற்கு பதிலடியாக கலாடாசரே அணியின் வீரர் பகம்பூ 90+3வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஆனாலும், பாயர்ன் முனிச் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பாயர்ன் முனிச் அணியில் இணைந்ததில் இருந்து இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

பாயர்ன் அணிக்காக அவர் இதுவரை 19 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE