‘கர்ணன்’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

191

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பிலான ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், படத்தின் வெளியிடு குறித்த அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகியுள்ளது.

இதன்படி, ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தனுஷ் இரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது என்பதுடன் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE