♥கர்ப்பமான பெண்கள் தூங்க வேண்டிய முறைகள் மற்றும் அதன் விளக்கங்கள்
Best Sleeping Position and their reasons in Pregnancy time
♥6-வதுமாதத்திற்கு மேல் தூங்குவதில் சிரமம் ஏற்படுவது சாதரணமான ஒன்று ஆகும். 8 ,ஒன்பதாவது மாதத்தில் இது இன்னும் மோசமாக கூடும். எனினும் நீஙகள் முறையாக தூங்க வேண்டியது அவசியமான ஒன்று எனலாம். கர்ப்பமான காலங்களில் உங்கள் உடல் பல மாற்றங்களை சந்தித்திருக்கும். அதன் காரணமாக கூட உங்களால சரி வர துாங்க முடியாது. அவற்றுள் சில காரணங்களை பார்ப்போம்
♥தூங்க வேண்டிய முறையை ஆங்கிலத்தில் SOS(Sleep On Side) என்று குறிப்பிடுவர்.
♥ஒரு பக்கமாக படுத்து தான் தூங்க வேண்டும். குப்புற படுத்து தூங்குவது மிகவும் ஆபத்தான ஒன்று எனலாம். ஏனெனில் குழந்தைக்கு முச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம்.
♥இடது புறமாக தூங்குவது தன மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றன. ஏனெனில் இடது புறமாக படுப்பதனால் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் தேவையான சத்துக்கள் தொப்புள் கொடியின் முலம் குழந்தைக்கு கிடைகிறது.
♥உங்களுக்கு முதுகு வலி இருந்தது என்றால், sos முறையில் படுத்து கொண்டு தலையனையை
அடிவயிற்றின் அடியில் வைத்து கொண்டு படுக்கவும். அது சற்று வழியை குறைக்கும்.
♥மெத்தையில் படுக்காமல் வெறும் கட்டிலில் அல்லது தரையில் பை விரித்து படுக்கலாம். இதன் மூலம் கூட முதுகு வலி சிறிது குறையலாம்.
♥இரவில் நெஞ்சு எரிச்சல் காணப்பட்டால் நீங்கள் பொறித்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
♥சில நேரங்களின் தூக்கம் வராமல் இருந்தால் இரவில் சிறிது தூரம் நடக்கலாம். அது சற்று மனதின் குழப்பத்திற்கு ஓய்வு கொடுக்கும்.
♥தவிர்க்க வேண்டியவை
நிமிய்ந்து படுப்பது மிகவும் தவறான ஒன்று. இவ்வாறு படுப்பதினால் முச்சு விடுவதுவதில் சிரமம், செரிமானக் கோளாறுகள் , குறைந்த இரத்த அழுத்தம்,குழந்தைக்கு இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவு போன்றவை ஏற்படலாம்.
♥இது மிகவும் தவறான ஒன்று. வயிற்றின் மீது படுத்தல் அல்லது மிதித்தால் வயிற்றின் உள்ளே பல மாறுதல்களை ஏற்படுத்தும். உங்கள் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது .