கர்ப்பம் தரிக்க மிகவும் சிறந்த மாதம் எது?

214

கர்ப்பம் தரிப்பதற்கு மிகவும் சிறப்பான மாதம், எதுவாக இருக்கும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் கூறப்பட்டதாவது, பனிகாலத்தில் கர்ப்பமானால் பராமரிப்பு அதிகம் தேவைப்படும். அதனால் தூங்கும் இடம் என்று அனைத்தும் கதகதப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதுவே வெயில் மற்றும் கோடைக்காலத்தில் கர்ப்பமானால், வெப்பம் மிகுந்த ஆடைகளை உடுத்த முடியாது. அதுமட்டுமின்றி உணவுகள், பழங்கள் என்று அனைத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் மே மாதத்தில் கர்ப்பமாகும் பெண்களுக்கு கர்ப்பக் காலம் முடிவதற்கு முன்னதாகவே குழந்தை பிறந்து விடுவதுடன், ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்ப்பமாகும் பெண்களின் குழந்தைகளின் எடை 8-9 கிராம் அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் மே மாதத்தில் கர்ப்பமாகும் பெண்களின் குழந்தைகள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனைக்கு ஆளாக நேரிடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

இது குறித்த ஆய்வின் முடிவில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் கருவுறுவது தான் மிகச் சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

SHARE