கர்ப்பிணி பெண்கள் அனைவருமே தன் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் உண்டாகாமல் நல்ல முறையில் பெற்றெடுப்பது அவர்களின் கடமையாகும்.
இதனால் கர்ப்ப காலத்தின் போது உள்ள பெண்கள் உடல், மனம் ரீதியாக மற்றும் உணவுகளில் பல மாற்றங்கள் எதிர்க்கொள்ள வேண்டும்.
மேலும் உணவு விஷயங்களில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் ஒரு தாய் சாப்பிடும் உணவுகள் அவர்களின் வயிற்றில் உள்ள குழந்தையை சென்றடையும்.
சில நேரங்களில் அவர்கள் உண்ணும் உணவு தாய்மார்களுக்கு ஒத்துக் கொள்ளாமல் போனால் அதனுடைய பாதிப்பு குழந்தையை தாக்கும்.கர்ப்பிணிகள் மீன்களை சாப்பிடலாம், ஆனால் அனைத்து வகையான மீன்களையும் சாப்பிடக் கூடாது.
கருவின் மூளை வளர்ச்சியை தூண்டக் கூடிய ஒமேகா போன்ற சத்துக்களை கொண்ட ஆற்று மீன், சாலமன் மீன், நெத்திலி மீன் போன்ற ஆற்று வகை மீன்களை அதிகமாக சாப்பிடாமல் குறைவாக எடுத்துக் கொள்ளலாம், எந்த பாதிப்பும் வராது.
எனினும் கடல்வாழ் உயிரினங்களை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.