
* பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் இரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்தசோகை.
* மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்தசோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.
* இரத்தசோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
* இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
* இரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.
* பல்வேறு ஆய்வுகளின் படி, ஒரு நாடு அல்லது ஒரு மாநிலம் இரத்தசோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4% வரை இழக்கும்.
* இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியான மற்றும் அறிவு ரீதியான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05%.
* வளரும் நாடுகளில் இரும்பு சத்து குறைவு, அயோடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5% அளவு இருக்கும் என உலக வங்கி கணக்கிட்டுள்ளது.