கர்ப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து, கருவை கலைத்த கணவன்! ஆப்கானில் வெறிச்செயல்

292

1356352865rape-9ஆப்கானிஸ்தானில் 6 மாத காப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து கருவை கலைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ashkamish மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண்மணி ஒருவரை, அவரது கணவர் கொடுமையாக தாக்கியுள்ளார்.

தனது மனைவி 6 மாத கார்ப்பிணி என்று கூட பாராமல் அவரது தலைமுடியை அறுத்து கட்டையை வைத்து தாக்கியதில் அவரது 6 மாத கரு கலைந்துள்ளது.

மேலும், கணவரின் தாயும், சகோதரியும் இப்பெண்ணை கயிற்றில் கட்டி வைக்க, அதனை பயன்படுத்திய கணவர் கொடுமையாக அடித்துள்ளார், மேலும் இதற்கு முன்னர் இப்பெண்ணின் மூக்கினையும் கணவர் அறுத்துள்ளார்.

தற்போது, இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண் Kunduz- இல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், குடும்பத்தினரின் இந்த வெறிச்செயலுக்கு மகளிர் விவகார துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், கணவர் தப்பியோடிவிட்டதால், இக்குற்றத்தில் தொடர்புடைய 2 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம், மேலும் தப்பியோடிய கணவர் Abdul Khalil Aseer- ஐ தீவிரமாக தேடி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, என்னை எனது கணவனின் குடும்பத்தினர் கொடுமைபடுத்திவந்தனர், எனக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது எனக்கூறி சந்தேகம்கொண்டதால் தான் இவ்வாறு செய்துள்ளர் என கூறியுள்ளார்.

SHARE