
டிசம்பர் 30–ந்தேதி, மயூரி காலை உணவு வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றார். அங்கு தனது ஆண் நண்பரான நந்தா என்பவரை பார்த்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ஜெயசீலன் தனது மனைவி விபசார அழகியாக மாறிவிட்டதாகவும், அவருடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் தரகர் எனவும் நினைத்துக் கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கியதோடு, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் அவரது வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக வயிற்றில் இருந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயசீலனை கைது செய்தனர்.
இந்த வழக்கு சுமார் 1 ஆண்டு காலமாக சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ஜெயசீலன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்திய ஜெயசீலனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.