கற்பழிப்பு குற்றவாளி விடுதலை 

179

பிரித்தானியாவில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் உருக்கமான கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தமக்கு நேர்ந்த கொடுமையை உருக்கமான கடிதம் ஒன்றால் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணிற்கு 12 வயது, பலாத்காரம் செய்த நபருக்கு 19 வயது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கிளாஸ்கோவில் அமைந்துள்ள உயர் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு 16 அல்லது அதற்கும் மேற்பட்ட வயது பருவம் என இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கருதியதாகவும், அந்த இளம்பெண் பல முறை பாலியலில் ஈடுபட்டவர் எனவும் நீதிமன்றத்தில் அவர் சாதித்ததை அடுத்தே விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் நீதிமன்றம் உண்மைகளை ஆராயவில்லை எனவும், அந்த சம்பவமானது பெருந்துயரத்தையும் மன அழுத்தத்தையும் அளித்தது எனவும் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கை முழுவதும் மன அழுத்தத்தையும் பெருந்துயரத்தையும் தந்த அந்த நபரையும் சம்பவத்தையும் எப்படி மறக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE