கலப்படம் செய்யப்பட்ட கொத்தமல்லி பிடிபட்டது.

180
கலப்படம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 575 கிலோகிராம் கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து நேற்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே கொத்தமல்லி கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தலா 25 கிலோகிராம் நிறையுடைய23 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொத்தமல்லி எங்கு கொள்வனவு செய்யப்பட்டது என்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட பற்றுச் சீட்டை கொத்தமல்லியை ஏற்றி வந்த வர்த்தகர்கள் தம்வசம் வைத்திருக்கவில்லை எனவும் அவர்கள் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கொத்தமல்லியின் மாதிரியினை கொழும்பிலுள்ள வைத்திய ஆய்வு நிறுவகத்துக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
SHARE