கலப்பட உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

211

ஒருசில செய்முறைகளின் மூலம் கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

  • பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்ப்பதற்காக கலப்படம் செய்கிறார்கள். எனவே பெருங்காயத்தை எரியச் செய்யும் போது, அது மிகுந்த ஒளியுடன் எரிந்தால் அது கலப்படம் செய்த பெருங்காயம் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
  • சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் கலந்திருந்தால், அதில் உள்ள சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைக்க வேண்டும். இதனால் அந்த சர்க்கரையில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படிந்திருக்கும்.
  • ஏலக்காயில் உள்ள அதனுடைய எண்ணெயை நீக்கி விட்டு அதற்கு பதிலாக முகப்பவுடரை சேர்க்கின்றார்கள். இதனால் இந்த ஏலக்காயை கையால் தடவிப்பார்க்க வேண்டும். அதில் முகப்பவுடர் இருந்தால் கையில் ஓட்டிக் கொள்ளும். பின் அந்த ஏலக்காயில் மணமில்லாமல் இருக்கும்.
  • மஞ்சள் தூளில், பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) என்ற ரசாயனம் சேர்ப்பதால், இந்த மஞ்சளை அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கலந்து பார்க்கும் வேண்டும். அப்போது அந்த மஞ்சள் கலப்படம் கலந்திருந்தால் அது மஜெந்தா நிறமாக மாறிவிடும்.
  • மிளகாய் தூளில் மரப்பொடி, செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி ஆகியவற்றை கலப்படமாக கலக்கிறார்கள். எனவே இதை நீரில் கரைத்து சோதித்தால் செங்கல் பொடி மிளாய் பொடியை விட விரைவில் கிளாசின் அடியில் போய் தங்கிவிடும்.
  • காபித் தூளில் கலக்கும் சிக்கரி கலப்படம் கல்ந்திருந்தால், அதை குளிர்ந்த நீரில் கலந்து குலுக்க வேண்டும். அப்போது காபித்தூளில் உள்ள சிக்கரி கீழே படிந்து இருக்கும்.
  • கொத்தமல்லி(தனியா) தூளில் குதிரையின் சாணத்தூளை கலக்கிறார்கள். எனவே இதை நீரில் கரைக்கும் போது, குதிரைச் சாணத்தூள் மட்டும் நீரின் மேல் மிதக்கும்.
  • கிராம்பில் உள்ள எண்ணெய் நீக்கப்பட்டிருப்பதை, அந்த கிராம்பு சுருங்கி இருப்பதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

SHARE