கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை!-அமைச்சர் மங்கள சமரவீர

529

இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுருவச் செய்தவர் மஹிந்த ராஜபக்சவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார்
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது,

உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில் சமாதான படைகளில் எமது படையினர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் மட்டங்களிலிருந்து கிடைத்த உத்தரவுகளால் குற்றங்களை செய்திருக்கலாம். எனவே அதன் உண்மைத் தன்மை தொடர்பில் விசாரித்து அறிவதில் எந்தவிதமான தவறும் இல்லை.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரபல்யமான தலைவர்கள் பல கோடி ரூபாய்களை பாதுகாப்பு தரப்பின் உயரதிகாரிகளுக்கு வழங்கி அரச ஒத்துழைப்புடன் தப்பிச் சென்றுள்ளனர்.

எனக்கு தெரிந்த அளவில் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகளும் இக்கொடுக்கல் வாங்கல்களில் தொடர்புபட்டிருந்தனர். அன்றைய பாதுகாப்பு செயலாளருக்கு இது நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன. இத் தகவல்களில் உண்மையும் இருக்கலாம். பொய்களும் இருக்கலாம். எனவே காணாமல்போனோரை கண்டறியும் அலுவலகம் மூலம் இதன் உண்மையை கண்டறிய முடியும்.

சர்வதேச விசாரணைகள், கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் சர்வதேச ஆலோசனைகள் பெறப்படும்.
எனவும் தெரிவித்தா

SHARE