கலப்பு நீதிமன்றம்; 46 பக்கங்கள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் கையளிப்பு

245

கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சட்ட வல்லுநர்கள் குழு அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிகட்டபோரின்போது இடம்பெற்றவை எனக்கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு பொதுநலவாய நாடுகளின் சட்டத்தரணிகள், நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்நம் ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரின்போது அமெரிக்கா தலைமையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஸ்ரீலங்கா அரசும் அனுசரணை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை குறித்த ஆராய்வதற்கென சுரேன் பெர்னாண்டோ, ஒஸ்ரின் பெர்னாண்டோ, பிரசாந்தினி மஹிந்த ரட்ண, ராம் மாணிக்கலிங்கம், ஒள்ளிட்ட சட்ட நிபுணர்கள் குழுவை மைத்திரி ரணில் தலைமையிலான கூட்டரசு அமைத்திருந்தது.

இந்தக்குழுவின் அறிக்கையே தற்போது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் எத்தகைய சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.un_colombo

SHARE