நேற்று இடம்பெற்ற களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கட்டிட நிர்மாண பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கிறிஸ்தவ மத வழிளிபாட்டின் போது பாதிரியார்கள் நல்ல பல கருத்துக்களையும் அறிவுரைகளையும் கூறி, விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி நல்ல பாதைகளை அமைத்துக் கொடுக்கின்றார்கள்.
அவ்வாறு எமது கோயில்களிலும் சமுக, கலாச்சாரத்தைப் பேணும் விதத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு எமது இளைஞர், யுவதிகளை கலாச்சாரப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
எனது மதந்தான் உண்மையானது.. எனது மதந்தான் உயர்ந்தது அல்லது முதன்மையானது என்னும் கொள்கைகளை நாம் தகர்த்தெறிய வேண்டும்.
இன, மாதம், சாதி, பிரதேச வேறுபாடுகளை கடந்து பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் இந்துக நாம் வாழவேண்டும். எம்மோடு சேர்ந்து ஏனையவர்களும் வாழ வேண்டும் என்ற நல் உணர்வும் எம்முள் உருவாகவேண்டும்.
கடந்த காலங்களில் பிரிவினைகளால் பல கசப்பான படிப்பினைகளை அனுபவித்து வந்துள்ளோம். ஒற்றுமைப்பட்ட வேளையெல்லாம் நாம் வெற்றி பேற்றிருக்கிறோம்,
பிளவடைந்த போதெல்லாம் தொற்றே போயிருக்கிறோம். அது கட்சியாக இருந்தாலும் சரி இயக்கமாக இருந்தாலும் சரி.
எனவே ஒற்றுமையைப் பேணி நாம் பலமடைவதோடு நாமக்கான உரிமைகளையும் இலகுவாக பெற்றுக்கொள்ள வேண்டிய அடித்தளங்களை ஆலயங்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ் அடிக்கல் நாட்டு விழாவுக்கு கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் பிரசன்னா இந்திரா குமாரும்ட கலந்து கொண்டார்.