கலில் அகமதை கெட்ட வார்த்தையில் திட்டிய டோனி

203

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரரான டோனி, இளம் வீரர் கலில் அகமதை கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 299 ஓட்டங்களை இந்திய அணி அசால்ட்டாக எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் கடந்த சில போட்டிகளில் சொதப்பி வந்த டோனி, தன்னுடைய விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

https://twitter.com/premchoprafan/status/1085135731457224705

 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, ரெஸ்ட் ரூமில் இருந்து இளம் கலீல் அகமது வீரர்களுக்கு டிரின்க்ஸ் போன்றவைகள் எடுத்து வந்தார்.

அப்போது டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தனர். ஆனால் டோனி திடீரென்று கலீல் அகமதை கெட்ட வார்த்தையில் திட்டினார்.

எப்போதும் பொறுமையாக இருக்கும் டோனி, அவரை கெட்ட வார்த்தையில் திட்டியது ஏன் என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.

ஆனால் அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

SHARE