கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று இந்தியாவின் பெங்களுரில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர்.
இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது