கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இன சமூகத்தைப் போன்றே அதன் கலை மற்றும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும்.
அனைத்து இன சமூகங்களும் தத்தமது மரபுகளுக்கு ஏற்ற வகையில் கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
சில வேளைகளில் நாம் மேற்கத்தைய கலாசாரத்தை நோக்கி நகர்கின்றோமோ என்ற சந்தேகம் எழுகின்றது.
நாம் நமது கலையையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும்.
நாகரீகம் என்ற போர்வையில் மேற்கத்தைய கலாச்சாரத்தை தழுவிக்கொள்ள முயற்சிக்கின்றோம்.
இந்த விடயம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.