தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. பிரசன்னாவுடன் திருமணமான பிறகு அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் தலையை காட்டி வருகிறார்.
ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இருக்கும் இவர்கள் சமீபத்தில் தொகுப்பாளினி டிடியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை சினேகா மச்சான பார்த்தீங்களா பாடலை கிண்டலாக பாடினார். பிரசன்னாவும் சினேகா பாடத்தொடங்கினால் உடனடியாக அவரை கெஞ்சி பாட்டை நிறுத்தச்சொல்வேன் என நகைச்சுவையாக பேசினார்.
இவர் பாடியது இணையத்தில் பிரபலமான கல்பனா அக்காவுக்கே சவால் விடும்வகையில் பாடினார் என ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.