கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வு

170

கிழக்கிலங்கை கல்முனை ஸ்ரீ முருகன் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், எண்ணைக்காப்பும், குடமுழுக்கும் நேற்று இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நடைபெறவுள்ளது.

இந்த கிரியை வழிபாடுகளை ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலய பிரதம குரு ஆரியபாஷா விற்பன்னர் ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ க. கு. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் உட்பட ஏனைய குருமார்களும் இவ்வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

முதல் நாள் கிரியை வழிபாடுகளுடன் ஆரம்பமான மகா கும்பாபிஷேக நிகழ்வுகள்,சுவாமிக்கு எண்ணைக்காப்பு வைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சுவாமிக்கு அனைத்து கிரியை வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

 

SHARE