உங்கள் திருமணத்தின் போது நீங்கள் உங்களை சிறந்த தோற்றத்தில் காண விரும்புவீர்கள். சிறந்த உடை, சரியான நகைகள், சிறந்த தோற்றம் போன்றவற்றை திட்டமிடுவீர்கள்.
இதற்கெல்லாம் முதலில் தேவை நீங்கள் சரியான எடையில் இருப்பது.
ஆரம்ப கால உற்சாகத்திற்குப் பின் நீங்கள் உங்கள் திட்டமிடலை ஆரம்பிக்க வேண்டும். உடை, சிகை அலங்காரம், ஒப்பனை, மண்டபம், விருந்தினர் பட்டியல் போன்றவை முக்கியம்.
ஆனால் இதை எல்லாம் விட முக்கியம் நீங்கள் பொருத்தமாகவும், கலராகவும் இருப்பது. புகைப்படங்கள் அழாகாகவும், ஒப்பற்றதாகவும் வருவது அவ்வளவு எளிதல்ல. நீங்கள் அதற்காக முழு மூச்சுடன் முயற்சிக்க வேண்டும். அதற்காக நன்கு வியர்வை சிந்தி உழைத்து நீங்கள் விரும்பும் உடல் எடையைப் பெறவேண்டும்.
உங்களுக்கு எந்த இடத்தில் பிரச்சினை உள்ளது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். வயிறு, தொடைகள், இடுப்பு, தோள்களின் மேற்பகுதி, கன்னம் இவற்றில் எது உங்கள் கனவை நனவாக்கும்?
இங்கே நாங்கள் உங்களுக்கு திருமணத்திற்கு முன் எடையைக் குறைத்து எவ்வாறு ஜொலிப்பது என்பதைப் பற்றிக் கூறுகிறோம். கவனமாக படியுங்கள்.
ஒரே வாரத்தில்
- ஒரே வாரத்தில் எடையைக் குறைப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளவதற்காக நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் நெருங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
- நீங்கள் ஆறு முதல் எட்டு வாரங்கள் முன்பிருந்தே இந்த முயற்சியில் ஈடுபடுவது நலம். இல்லை என்றால் திருமணம் நெருங்கி வரும்போது முடியாமல் போகலாம்.
- நாட்கள் செல்லச் செல்ல போதுமான நேரம் கிடைக்காது, மேலும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாகி விடுவீர்கள்.
உங்கள் தோற்றம்
1. மெல்லிய மணமகனாகவோ மணமகளாகவோ மாற வேண்டுமென்றால், சில யோசனைகள் உள்ளன. முதலில் உங்கள் தோற்றத்தை ஆய்வு செய்ய தொடங்குங்கள். பண்பும், நிதானமும் மணமக்களுக்கு அவர்களது தோற்றத்தாலேயே கிடைக்கிறது. உங்களுக்கு நல்ல தோற்றம் இல்லை என்றால் அதை எவ்வாறு மேம்படுத்துவது என்று கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உயரமாகவும், மெலிதாகவும் இருப்பீர்கள்.
2. உங்கள் கால்களை சாய்வாக வைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்காருங்கள். ஒரு புத்தகம் அல்லது சிறு தலையணையை தலையில் வைத்துக் கொள்ளுங்கள். நிமிர்ந்து நேராக உட்காருங்கள். இதையே மீண்டும் நின்று கொண்டு செய்யுங்கள். புத்தகம் கீழே விழாது என்ற நம்பிக்கை வந்தவுடன் நடக்க முயலுங்கள்.
3. தினமும் இதை 10-15 நிமிடங்கள் செய்யுங்கள், சீக்கிரம் உட்கார்ந்து, எழுந்து, சிறிது தொலைவு நடக்க வேண்டும்.
திருமணத்திற்கு முந்தைய உணவுத் திட்டம்..
திருமணத்திற்கு முன் எடையைக் குறைக்க நீங்களாகவே ஏதாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளாதீர்கள். நீங்கள் சரியான வகையில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பாக நல்ல வைட்டமின், சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. குறைந்த அளவு கலோரி உணவுகள் வயிறு நிறைய சாப்பிடுங்கள்.
2. பழங்கள் காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
4. சிவப்பு இறைச்சியை நீக்கி விடுங்கள். கோழிக்கறியிலுள்ள புரதம், மீன் மற்றும் டோஃபு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. மது, காபி குடிப்பதை திருமணத்திற்கு இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பே குறைத்து விடுங்கள்.
6. அதற்கு பதில் தண்ணீர் அதிகமாகப் பருகுங்கள். ஐந்து அல்லது ஆறு டம்ப்ளர் தண்ணீர் பருகுவது முன்னெப்போதும் இல்லாத வகையில் உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.