இரும்புச்சத்து குறைபாடு குழந்தைகளுக்கு, இளம்பருவங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்படக்கூடும்.
ஏனென்றால் விரைவான உடல் வளர்ச்சியுடன் தொடர்புடைய இரும்பு தேவைக்கு அதிகமான கோரிக்கைகளை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில் இருப்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் கல்யாண முருங்கை இலையில் சூப் போட்டு குடித்தால் நல்லது.
அந்தவகையில் தற்போது இந்த சூப்பை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கல்யாண முருங்கை இலை – 1 கப்
- மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- சீரக தூள் – அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- பூண்டு – 10 பல்
- தக்காளி – 2
- வெங்காயம் – 1
- கொத்தமல்லி, புதினா – 1 கைப்பிடி
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கல்யாண முருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினா, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சூடானதும் அதில் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் சீரகத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் புதினா, கல்யாண முருங்கை இலையை போட்டு வதக்கவும்.
கல்யாண முருங்களை இலை சற்று வதங்கியதும் அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்றாக கொதித்து திக்கான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான கல்யாண முருங்கை இலை சூப் தயார்.