ஒதுக்கப்பட்ட கல்லறையை விட்டு வேறு கல்லறைகளில் புதைக்கப்பட்ட 3 பேரின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Somerset கவுண்டியில் தனியாருக்கு சொந்தமான ஒரு சுடுகாடு உள்ளது. அந்த பகுதியில் இறப்பவர்கள் இங்குள்ள கல்லறைகளில் புதைக்கப்படுவது வழக்கமாகும்.
புதைக்கப்பட வேண்டிய கல்லறை மற்றும் இடத்தை இறப்பவர்களின் உறவினர்கள் அல்லது இறக்க போகும் நிலையில் உள்ளவர்கள் முன்னரே தெரிவு செய்யலாம்.
இதற்கு முதலிலேயே பணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் கடந்த 2013 முதல் 2016 வரை உயிரிழந்த மூவரின் உடல் அவர்களுக்கான சவப்பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களை புதைக்க விரும்பிய இடத்தில் புதைக்கப்படாமல் வேறு இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் மாற்றி புதைக்கப்பட்ட மூவரின் சடலங்களை அங்கிருந்து தோண்டி எடுத்து நடந்த தவறை உறுதி செய்தார்கள்.
சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் தவறால் இது நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பதிலளிக்க சம்மந்தப்பட்ட தனியார் சுடுகாடு நிறுவனம் மறுத்துள்ளது.
கடந்த ஜனவரியில் உயிரிழந்த சில பெண்களின் சடலங்கள் சுடுகாட்டில் எரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் சாம்பல்களை மாற்றி வேறு பெண்களின் சாம்பல்களை உறவினர்களிடம் ஊழியர்கள் கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.