கல்லறையில் கட்டுக்கட்டாக பணத்தை புதைத்து வைத்த தீவிரவாதிகள்

208

பிரான்ஸ் நாட்டில் உள்ள கல்லறை ஒன்றில் தீவிரவாதிகள் கட்டுக்கட்டாக புதைத்து வைத்த பணத்தை பொலிசார் அதிரடியாக கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள Montparnassee கல்லறையில் தான் இப்பணம் சிக்கியுள்ளது.

உளவுப்பிரிவை சேர்ந்த பொலிசார் ஒருவர் தீவிரவாதியை போல் வேடமிட்டு ஐ.எஸ் ஜிகாதிகளின் தகவல்கள் சேகரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட இந்தக் கல்லறையில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், குறிப்பிட்ட அந்த நபரின் கல்லறைக்கு செல்லும் வழியும் ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவலை பெற்ற பொலிசார் கல்லறையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது, கல்லறையின் சிதைந்த ஓட்டைக்குள் 13,300 யூரோ இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த பணத்தை பயன்படுத்தி 4 அதிநவீன துப்பாக்கிகளை விலைக்கு வாங்கி தாக்குதல்களை நடத்த வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பணம் மற்றும் கடிதத்தை மீட்ட பொலிசார் விசாரணையை தொடங்கி இதில் தொடர்புடைய 7 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இதுமட்டுமில்லாமல், கல்லறையில் வேறு சில இடங்களிலும் பணம் பதுக்கப்பட்டுருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

பிரபலமானவர்கள் இக்கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் போல் வந்த சில தீவிரவாதிகள் தான் இப்பணத்தை புதைத்து வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கல்லறையில் கிடைத்த பணத்தை தொடர்ந்து பொலிசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE