மூத்த மகள் மலியாவை பல்கலைகழகத்தில் வாகனத்திலிருந்து இறக்கிவிட்ட பின் தன்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அவர் கூறுகையில், என்னுடைய மூத்த மகள் மலியாவை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்த்தேன். பல்கலைகழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்ட பின் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த உணர்வு இதயத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்வதைப் போல இருந்தது என கூறியுள்ளார்.
மலியா முன்னால் தான் அழாமல் இருந்தது பெருமையாக இருந்ததாக கூறிய ஒபாமா, பின்னர் தான் கண்ணீர் விட்டு அழுததை பார்த்த தன்னுடைய பாதுகாப்பு பிரிவினர் அதை பார்த்தும் பார்க்காதது போல நடந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருந்தாலும், நம் வாழ்வின் இறுதியில் நம் குழந்தைகள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியையே நாம் நினைவில் வைத்து கொள்வோம் எனவும் ஒபாமா கூறியுள்ளார்.