கல்லூரி மாணவியாக நடிக்க ஒப்பந்தமாயுள்ள திருநங்கை

128

கல்லூரி மாணவியாக நடிக்கும் ஸ்ரீ பல்லவி

தாதா 87 படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீபல்லவி. நடிகைகளில் முதல்முறையாக திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்றார். தற்போது ஸ்ரீபல்லவி புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நெஞ்சம் நிமிர்த்து என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் புதுமுகம் மோகன் கதாநாயகனாகவும் வராகி வில்லனாகவும் நடிக்கிறார்கள். சாம் இம்மானுவேல் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது:- ‘தனி மனித சுதந்திரமும், உரிமையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லும் இந்த படத்தில், கல்லூரி மாணவியாக ஸ்ரீபல்லவி நடிக்கிறார்.
ஸ்ரீபல்லவிஎங்கு அநீதி நடந்தாலும் தட்டி கேட்கும் நாயகனுக்கும் சமூகத்தில் பல அநீதிகளை செய்யும் வில்லனுக்கும் நடக்கும் போராட்டமே கதை. நாயகனுக்கு ஊக்கம் அளிக்கும் வேடத்தில் ஸ்ரீ பல்லவி நடிக்கிறார்’ என்றார்.
SHARE