கல்வியின் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்

213

கல்வியின் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கிளிநொச்சி கல்லாறு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு விசேட கலந்துரையாடல் ஒன்று கல்லாறு பொது நோக்கு மண்டபத்தில் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வேழமாலிகிதன் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைக்கையில்,

இன்று உங்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் சகிதம் நாங்கள் இங்கு வருகை தந்துள்ளளோம்.

இந்த கல்லாறு கிராமம் இன்று எல்லோராலும் பேசப்படும் கிராமமாக காணப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி, குடிநீர் பிரச்சினை மற்றும் மக்கள் அற்ற வீடுகள் தொடர்பாக எங்களுக்கு நீங்கள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.

ஆனால் இங்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் வந்திருக்கிறார், நீங்கள் கல்வி நிலை தொடர்பில் பேசிக்கொள்ளவில்லை என்பது மனக்கவலையாக உள்ளது.

கல்வியின் மதிப்பை ஒவ்வொருவரும் உணரவேண்டும் . இங்குள்ள பொற்றோர்கள் நீங்கள் தான் உங்கள் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி உணர்த்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று எங்களின் வரலாறுகளையும் கலாச்சாரங்களையும் இல்லாமல் ஆக்குவதற்கு பல வழிகளில் முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்குள் அகப்பட்டவர்களாக நாங்கள் மாறக்கூடாது. நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் துயரப்படுவதை போல உங்களின் பிள்ளைகளையும் துன்பப்படுத்த வேண்டாம்.

அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் அதன் ஊடாக அவர்கள் முன்னோக்கிய நிலைக்கு வருவார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சந்திப்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் முரசுமோட்டை தர்மபுரம் கட்சியின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20 625-0-560-320-160-600-053-800-668-160-90-21 625-0-560-320-160-600-053-800-668-160-90-22 625-0-560-320-160-600-053-800-668-160-90-23

SHARE