கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்கள் நீக்கம்

185

download

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்ளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

கிரமமற்ற பணிகள், உரிய நேரத்தில் பணிகளை பூர்த்தி செய்யாமை, கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்களை பணி நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவுடன் இணைந்து அதிகாரிகள் பணி நீக்கப்படுவதனால் ஏற்படக் கூடிய வெற்றிடத்திற்கு புதிய அமைச்சர்களை நியமிக்குமாறு கல்வி அமைச்சருக்கு பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

13 ஆண்டுகள் பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான செயற்திறனற்ற அதிகாரிகளினால் அரசாங்கத்தின் முயற்சிகள் பாதிக்கப்படும் என பிரதமர், கல்வி அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

SHARE