களியாட்ட விடுதி தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு

204

maithiripala-800x415

கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும் பாதுகாவலர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

அண்மையில், இந்த விடுதி தாக்குதலில் சில ஊடகங்களில் ஜனாதிபதியின் மகன் தாஹாம் தொடர்புபட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே விசாரணைகளை விரைவில் முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரிடம் ஜனாதிபதி தெரிவித்தார் என நாடாளுமன்ற ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம்,சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE