களியில் கலை வடிக்கும் சிறுவன் – இரண்டு நிமிடங்களில் அசரவைக்கும் திறமை

211

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.றசாட் அகமட் என்ற 10 வயது சிறுவன், களியை பயன்படுத்தி மிருகங்களின் உருவத்தை வெறும் இரண்டு நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக வடித்துக்காட்டும் திறமை கொண்டுள்ளார்.

ஏ.ஆர்.றசாட் அகமட் சம்மாந்துறை அல் மனார் வித்தியாலயத்தில் தரம் 5 இல் படித்து வருகின்றார். இவர் நேற்று எமது சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனைக்கு அவரது அதிபர் நசாருடன் வந்திருந்தார்.

இதன்போது, அங்கிருந்த வலயக்கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் ஒவ்வொரு மிருகங்களின் பெயரையும் சொல்லும்போது, மிகவும் நிதானமாகவும் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளும் மிகவும் அழகாக களியில் வடித்துக்காட்டியமை அனைவரையும் பிரமிக்கச்செய்துள்ளது.

முதலில் குறிப்பிட்ட மிருகத்தின் தலையை வடிவமைத்து, படிப்படியாக கால்கள் உடம்பு என்று வளர்த்துச்செல்கிறார். சிங்கம், புலி, கரடி அணில் போன்ற பல மிருகங்களை தத்ரூபமாக வடித்துக்காட்டியுள்ளார்.

குறித்த சிறுவனின் தந்தை ரி.எல்.எ.றசூல், தாயார் அமீனா. இருவரும் தாதிய உத்தியோகத்தர்கள். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள். இவரது குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது எதிர்கால இலட்சியம் ஒரு ஆக்கிரெக்ற் இன்ஜினியராக வருவது என்று குறித்த சிறுவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90-2 625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90

SHARE