களுவாஞ்சிக்குடியில்சன நெரிசல் மிக்க பகுதியில் நுழைந்த முதலை!

214

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் இன்று அதிகாலை 9 அடி நீளமான முதலையொன்று நுழைந்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் பயணித்த ஒருவர் கிராமத்துக்குள் நுழைந்த முதலையினை கண்டு அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

இதனையடுத்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு வருகைத்தந்த வெல்லாவளி வன விலங்கு அதிகாரிகள் முதலையினை மீட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதனால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE