முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது.
இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
முதல் போட்டியிலே கங்குலியின் லிப்ரா லெஜண்ட்ஸ் மற்றும் ஷேவாக்கின் ஜெமினி அரேபியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரின் துணை நிறுவனத்திற்கு டோனி தான் தூதுவராக உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக அவர் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.