கழிவுகளால் அசுத்தமடைந்துள்ள புனித கங்கை நதி!

240

கதிர்காமத்தில் அமைந்துள்ள புனித மாணிக்கக் கங்கை நதியானது கழிவுகளால் அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் இந்த ஆலயத்தின் உற்சவங்கள் நிறைவடைந்ததையடுத்து, அங்கு சுற்றாடல் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உற்சவங்கள் நிறைவடைந்தவுடன், அப்பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை அரச நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (10)

மேலும் இங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது பாலங்களுக்கு கீழ் பொலிதீன் மற்றும் இளநீர் கழிவுகள் நிறைந்துக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பாடசாலை விடுமுறைக்காலம் என்பதால் அதிகமானோர் குறித்த ஆற்றில் நீராடுவதற்கு வருகைத் தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (11)

இதேவேளை, இந்தியாவில் கங்கை நதி புனித நதியாக கருதப்படுவதைப் போல் இலங்கையின் புனித நதியான மாணிக்க கங்கை கருதப்படுகின்றது.

எனவே, கழிவுகள் நிறைந்த ஆறாக மாணிக்க கங்கை மாறுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (12) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (13) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (14)

 

 

SHARE