கழுத்தின் கறுமையை 20 நிமிடத்தில் போக்க சூப்பர் வழிகள்

180

நம் உடலின் சில பகுதிகள் மட்டும் கறுமையாக இருக்கும். அப்படி கருமையாகும் பகுதிகளில் ஒன்று தான் கழுத்து.

நீண்ட நேரம் அவ்விடத்தில் சூரியக்கதிர்கள் பட்டால், மோசமான சுகாதாரம் போன்ற காரணங்களால் கறுப்பாக இருக்கிறது.

எலுமிச்சை

3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் பவுடர் ஆகியவற்றை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.

இதை இரவு நேரத்தில் கறுமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின் C நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து, கழுத்தின் கறுமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி

பப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கறுமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

SHARE