கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதூர் மக்கள்

335

மூதூர் பகுதியில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் வீதிகளை புனரமைத்துத் தருமாறு கோரி அப்பகுதி மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு மூதூர் அரபுக்கல்லூரி சந்ததியில் முன்னெடுக்கப்பட்டது.

அரபுக்கல்லூரி வீதி, மார்க்கட் வீதி, மற்றும் பெரியபால சந்தி வரையிலான 2.5கி.மீ நீளமுடைய வீதி ஆகியவை சுமார் 2 1/2 வருட காலத்திற்கும் அதிகமாக புனரமைக்கப்படாமலும்,

குறித்த வீதிகள் காப்பர்ட் விதிகளாக அமைக்கப்படுவதற்காக  வீதியின் அருகாமையிலுள்ள கடைகள் மற்றும் வீடுகள் என்பன உடைக்கப்பட்டு அகன்ற வீதிகளை அமைப்பதற்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டிருப்பினும்,

இதுவரைகாலமும் அப்பகுதியில் வடிகான்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை எந்தவித பயனும் கிடைக்கப்பெறவில்லை எனவும். இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுகள் கிடைக்கப்பெறும் வரை இப்போராட்டத்தினை தாம் கைவிடுவதாக இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE