கவனிப்பாளரால் 4 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்மனதை உருக வைக்கும் வீடியோ

262

 

அமெரிக்காவில் குழந்தை கவனிப்பாளர் பெண், 4 வயது குழந்தை மீது உட்கார்ந்து அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லூக்கா பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீடியோவில் தோன்றும் குறித்த பெண் குழந்தையின் கவனிப்பாளர் என கூறப்படுகிறது.

குழந்தை உடலில் மாற்றத்தை கண்ட தாய் Tiffany, வீட்டில் கண்காணிப்பு கமெரா ஒன்றை பொருத்தியுள்ளார்.

குறித்த கண்காணிப்பு கமெராவில் பதிவான வீடியோவில், கடந்த யூன் மாதம் முதல் குழந்தையின் கவனிப்பாளராக பணிபுரிந்த வரும் Lillian D White என்ற பெண், குழந்தையின் காலை தர தர வென இழுத்தும், குழந்தை மீது அமர்ந்து அவரின் கால்களை பிடித்துக் கொண்டு, உடையை போட்டு விடுகிறார். இந்த கொடுமையால் குழந்தை கதறி துடிக்கிறது.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் Lillian D White பெண்ணுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவிக்க Lillian D White மறுத்துள்ளார்.

SHARE