கவர்ச்சிகரமான அம்சங்களுடன் கூடிய Techno Poa6 Pro 5G., Arc Lighting வசதியுடன்…

78

 

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Techno தனது Techno Poa6 Pro 5G போனை இந்திய சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) இந்த போன் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த ஃபோன் 6nm MediaTek Dimensity 6080 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அலகு உள்ளது.

இது 70W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. இரண்டு ரேம் வகைகளில் வரும் Tecno Pova6 Pro 5G போன் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து விற்பனைக்கு வரும்.

Techno Poa6 Pro 5G போன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.19,999, 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.21,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனை ஆரடர் செய்யும்போது எந்த வங்கி அட்டைகளைப் பயன்படுத்தினாலும், உடனடி வங்கி தள்ளுபடி ரூ.2,000 பெறலாம். இதன் மூலம், 8 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.17,999 க்கும், 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வகை ரூ.19,999 க்கும் கிடைக்கிறது.

இந்த போனுடன் ரூ.4,999 மதிப்புள்ள Tecno S2 Speaker இலவசமாக வழங்கப்படுகிறது.

அமேசான் உட்பட அனைத்து சில்லறை விற்பனை கடைகளிலும் ஏப்ரல் 4 மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும்.

Comet Green மற்றும் Meteorite Gray வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Tecno Pova6 Pro 5G ஃபோன் 1300 nits Peak Brightness-உடன் 6.78 inch Full HD+ AMOLED display மற்றும் 120Hz Refresh rate கொண்டுள்ளது. இது 6nm MediaTek Dimension 6080 SoC chipset Processor மூலம் இயங்குகிறது.

Tecno Pova6 Pro 5G ஃபோனில் 3x in-sensor zoom கொண்ட 108-megapixel primary sensor மற்றும் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. இதில் Arc Lighting எனும் புதிய அம்சம் உள்ளது

2-megapixel portrait sensor camera மற்றும் dual LED flash மற்றும் குறிப்பிடப்படாத AI backed lens camera உள்ளன.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு dual tone LED flash கொண்ட 32-Megapixel sensor camera உள்ளது.

டைனமிக் போர்ட் 2.0 அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. Tecno Pova6 Pro 5G ஃபோன் 6000mAh பேட்டரி மூலம் 70W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் உள்ளது. தொலைபேசியில் 5G, Wi-Fi, Bluetooth, NFC, GPS, USB Type-C இணைப்பு உள்ளது.

SHARE