தமிழில் மேயாத மான், மெர்குரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் இந்துஜா. சமீபத்தில் திரைக்கு வந்த ‘மகாமுனி’ படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். அனைத்து படங்களிலும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது ‘சூப்பர் டூப்பர்’ என்ற படம் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள குத்து பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.
