நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது விஜய்க்கு ஜோடியாக சர்கார் படத்தில் நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி அவர் சண்டக்கோழி 2, சாமி 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.எப்போதும் கவர்ச்சி காட்டாமல் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துவரும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது “நான் எப்போதும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்” என கூறியுள்ளார்.மேலும் எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.