மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கு முக அழகின் வசீகரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கஸ்தூரி மஞ்சள் என்பது காய்ந்த கிழங்கு வகையைச் சார்ந்தது.
இந்த மஞ்சள் கரிப்புச் சுவையைக் கொண்டது.
மேலும் இது கிருமி நாசினியாக பயன்படுகிறது.
- கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு இதில் 500மி.கி அளவு தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் குணமாவதுடன் பெண்களின் வெள்ளைப் போக்கு மற்றும் அதிக மாதவிடாய் போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட செய்யும்.
- கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து அதனை அடிபட்ட புண்கள் மற்றும் ஆறாத நாள்பட்ட சிரங்குகள் மேல் பூசி வந்தால் விரைவில் ஆறிவிடும்.
- கஸ்தூரி மஞ்சள் தூளை வெங்காயச் சாற்றில் குழைத்து அதனை கட்டிகள் மீது பூசினால், விரைவில் கட்டிகள் உடைந்து குணமாகும்.
- கஸ்தூரி மஞ்சளைச் சுட்டு அதிலிருந்து வரும் புகையை முகர்ந்தால் மூக்கு ஒழுகள் மற்றும் மூக்கு நமைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
- கஸ்தூரி மஞ்சளை தயிரில் கலந்து குழைத்து பின் அதனை முகத்துக்கு பூசி வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகப்பருக்கள், முகச்சுருக்கம், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும்.