கஹவத்தை வெள்ளந்துறையில் 71 வயதான மூதாட்டி வெட்டி படுகொலை

134

 

வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளதுரை வெலேவத்தையில் வசித்து வந்த வினிதா ஜெயசுந்தர என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

தாய் ​​வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த நிலையில்
அவர் தனது மகளுடன் வீட்டில் தங்கியிருந்த நிலையில், மகள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது,தாய் ​​வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த நிலையில் கிடந்ததை அடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கஹவத்தை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கஹவத்தை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்தார்.

SHARE